tamilnadu

உணவகங்கள் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்

சேலம், ஜூன் 8- சேலத்தில் திறக்கப்பட்ட உணவ கங்கள் அரசின் விதிமுறைகளை முழு மையாக கடைபிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளதாவது, தமிழக முதல்வர் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக் கைகளை முழுமையாக பின்பற்றி நோய்த்தொற்று ஏற்படாமல் தடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை அனைவரும் முழு மையாக பின்பற்றிட வேண்டும் என வும், இந்நோய்த்தொற்று பரவா மல் தடுப்பதற்கான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அமல்படுத் தப்பட்டுள்ள தடை உத்தரவின் கார ணமாக மக்களின் தேவைகளை நிறை வேற்றிடவும், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறு வனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட வற்றிற்கு சில தளர்வுகளை அளித்து இவற்றை நடத்திட அனுமதி அளித் துள்ளார். சேலம் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண் கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தை கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத் தப்படுகிறது. மருத்துவம் மற்றும் அத்தி யாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளி யில் வர அறிவுறுத்தப்படுகிறது. உண வகங்களில் தனிநபர் இடைவெளி 6 அடி என்ற அடிப்படையில் பின்பற்றப் பட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு 40 முதல் 60நொடிகள் வரை கழுவ வேண்டும். மேலும், கிருமிநாசினி களை பயன்படுத்தி 20 நொடிகள் வரை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பொதுஇடங்களில் தும்மும் பொழுதும், இருமும் பொழுதும் கைக்குட்டை கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

உணவகம் உரிமையாளர் கள் தங்கள் பணியாளர்கள் அனை வருக்கும் உடல் வெப்பநிலை குறித்து  பரிசோதனை செய்யப்பட வேண்டும். நோய் அறிகுறி இல்லாத நபர்களை  மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும். உணவகத்தில்  கொரோனா நோய் தொடர்பான விழிப் புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருக்க வேண்டும். வாகனம் நிறுத்துமிடத்தில் சமூக இடைவெ ளியை முறையாக பின்பற்ற வேண் டும். கூடுதலாக வரும் வாடிக்கையா ளர்களுக்கு காத்திருக்க ஏதுவாக இருக்கை வசதியுடன் கூடிய தனி இடத்தினை ஒதுக்கி முறையான சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டும். 50 சதவிகித இருக்கையில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து உணவருந்த வேண்டும். மேலும், தங்கும் விடுதிகள் அனைத் தும் அரசின் மறுஉத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என தெரிவித்துள் ளார்.

;