tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொதுமக்களிடம் பிரச்சாரம் மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம்

சேலம், ஜன. 21- குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொதுமக்களிடம் பிரச் சாரம் மேற்கொள்வது என சேலம் மற்றும் நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை மேடை கலந் தாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. தமிழன மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் சேலம் பிபிசி நினைவகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட பொருளாளர் ஜி. கே.சுபாசு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வரும் ஜன.26 ஆம் தேதியன்று தேசிய குடியுரி மைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த உண்மை கருத்துக்களை விளக்கி அனைத்து வீடுகளிலும் பிரச்சாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  முன்னதாக, இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் பி ராம மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறு பினர் எம் குணசேகரன், மதிமு கவை சேர்ந்த ஆர். நடேசன், ஆ. ஆனந்தராஜ், திராவிடர் கழகத்தை சேர்ந்த டேவிட், சரவணன், சமம் குடிமக்கள் இயக்கத்தை சேர்ந்த எப்.எம். ரூபினி சுந்தர், மோகன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எ, சய்யத் முஸ் தபா, மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த எஸ் இப்ராஹிம். மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த எஸ்ஆர் இமாம் மொய்தீன், சேவகன் எஸ் இப்ரா ஹிம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எகே நசீர் அகமத், எ அன்சர் பாஷா, யூத்லீக் கட்சி ஜக்கி ரியா, எஸ் அலாவுதீன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் ஜி.கணபதி, ஜனநாயக மாதர் சங்க செயலாளர் ஐ. ஞான சௌந்திரி, தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் எ. ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மு. பெரியண்ணன், என். பிரவீன் குமார், எம். கனகராஜ், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க செயலாளர் கணேசன், தலைவர் கந்தசாமி,   பொருளாளர் வெங்கடேசன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்திற்கு மதி முக அவைத்தலைவர் வழக்க றிஞர் எம்.பழனிச்சாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பி.டி.தனகோ பால் துவக்கி வைத்து பேசினார். கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் நவீத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப் பாளர் ஏ.ரங்கசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் குழந்தான், சமூக ஆர்வலர் சித்திக், ஆதிதமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் மணிமா றன், மனிதநேய மக்கள் கட்சி  மாவட்ட செயலாளர் ராஜாமுக மது, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட செயலாளர் கே.தங் கமணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சங்க மாநில செயலாளர் செம்மலர் பெ.க.கருப்பன், சிபிஐ நகர செயலாளர் தம்பிராஜா, இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட துணை செயலாளர் கு. சிவராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் வின் சென்ட் தேவதாஸ்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் அஹதுல் லாஹ், மாவட்ட செயலாளர் ஷேக் காஜாமொய்தீன், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் ஹசீப் அப்துல் ரகுமான், காங்கிரஸ் கட்சி மாவட்ட துனை தலைவர். லோக நாதன் ஆகியோர் கலந்து கொண் டனர்.  இதில், குடியரசு தினத்தன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதி வேட்டிற்கு எதிராகவும் அதன் பாதிப்புகளை விளக்கி நாமக் கல் மாவட்டம் முழுவதும் அனைத்து வீடுகள் மற்றும் 50 மையங்களில் பிரச்சாரம் செய்வது. இதுதொடர்பாக 50 ஆயிரம் துண்டு பிரசுரங்களை பொதுமக்க ளிடம் விநியோகிப்பது. ஜன. 30ஆம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினத்தன்று நாமக்கல் பூங்கா சாலையில் மனிதசங்கிலி இயக்கம் நடத்துவது. ராசிபுரத் தில் மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறுபான்மை நல குழு சார் பில் மகாத்மா காந்தி நினைவு கருத் தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

;