tamilnadu

img

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக - கிராம வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சேலம், ஜூலை 28- கொரோனா பாதிப்பில் உயிரிழந்த  மற்றும் பாதிப்பு ஏற்பட்ட ஊழியர்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வலியு றுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஊழி யர்கள் சங்கத்தினர் அஸ்தம்பட்டி பகுதி யில் உள்ள வங்கி முன்பு உண்ணாவி ரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் நாடு கிராம வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், சிலர் இறந்தும் உள்ளனர். அவர்களுக்கு தேசிய வங்கிகளில் வழங்கும் இழப் பீடு போல் வழங்கிட வேண்டும். உரிய  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அஸ்தம்பட்டி வங்கி முன்பு  கிராம வங்கி ஊழியர்கள் உண்ணாவி ரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார்.  இதில், மாநில பொதுச்செயலாளர் மாதவராஜ், அலு வலர்கள் சங்கத்தின் தலைவர் காம ராஜ், செயலாளர் ஆண்டோ, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.முருகேசன், இந்திய வங்கி ஊழியர் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் தயாளன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;