tamilnadu

img

வீரபாண்டியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மனோன்மணி எம்எல்ஏ பங்கேற்பு

சேலம், ஜன, 12- சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வீரபாண்டி சட்டமன்ற உறுப் பினர் மனோண்மணி குடும்ப அட் டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். தமிழக அரசு சார்பில் குடும்ப அட் டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்து டன், சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை கள் வழங்கும் நிகழ்ச்சி ஜன. 5ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ். நாட்டாமங்கலம் நியாய விலைக் கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மனோண்மணி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். உடன் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் பழனிசாமி, செந் தில் உள்ளிட்டு இயக்குனர்கள் இந்நி கழ்ச்சியில் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் 1,577 நியாய விலைக் கடைகளில் உள்ள 9,72,118 அரிசி பெறும் குடும்ப அட்டைதா ரர்களுக்கு 1000 ரூபாயுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பும், சுமார் 8.60 லட்சம் நபர்களுக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகளும் பொங்கல் பண்டிகையினை முன் னிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசு தொகுப்பு ஜன.12ம் தேதி வரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்பட உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு ஜன. 13 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது.

;