tamilnadu

img

இளம்பிள்ளை: வாடகை வாகனங்கள் ஆக்கிரமிப்பில் பேருந்து நிலையம்

இளம்பிள்ளை, மார்ச் 21- இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் வாடகை வாக னங்கள் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரிக்கை எழுந்துள் ளது.  சேலம் மாவட்டம்,  இடங்கணசாலை பேரூராட்சிக்குட் பட்ட வணிக வளாகத்தில் 50க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் பேருந்து நிலையமும் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்  வாடகை வாகனங்கள் மற்றும் தனியார் ஆம்பு லன்ஸ் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், ஓட்டுநர்கள், வியாபாரிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த வாகனங்களை பயணி களுக்கு இடையூறு இல்லாமல்  தற்காலிகமாக வேறு இடத் தில் நிறுத்துவதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

;