tamilnadu

img

தப்பக்குட்டை ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு

இளம்பிள்ளை, மார்ச் 3- இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை ஏரியின் பிரதான நீர்வழி பாதை தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக் கோரி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை  ஊராட் சிக்கு உட்பட்ட சின்ன மாரியம்மன் கோவில் அருகில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியானது நீர் இல்லாமல் உள்ளது. தமிழக அரசு தற்சமயம் ஏரி மற்றும் நீர் ஓடையினை தூர்வாரி, மழைநீர் சேகரிக் கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  இளம்பிள்ளை - எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள இந்த ஏரியின் பிரதான நீர்வழி பாதையை தனிநபர் ஒருவர் மண்ணை கொட்டி அடைத்து வருகிறார். சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல் தெரிவித்தும் நட வடிக்கை எடுக்க அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக் கப்பட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.