tamilnadu

img

தேசிய வாக்காளர் தினம்: மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

சேலம், ஜன.25-  10ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சேலத்தில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் துவக்கி வைத்தார்.  ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினம் ஜனவரி - 25 தேதியன்று கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு 10ஆவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி யாரும் விடு படாமல் வாக்களிப்பதின் பொறுப்பு நம் அனைவரின் பொறுப்பாகும் என்ற முழக்கத்தை முன்வைத்து கொண்டா டப்பட்டது. இதன்படி சேலம் பழைய பேருந்து நிலையம்,  நேரு கலையரங்கில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடை பெற்றது.  இதைத்தொடர்ந்து சேலத்தில் கல்லூரி மாணவ, மாண வியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளுவர் சிலை வழி யாக பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நேரு கலை யரங்கில் முடிவடைந்தது.  இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன், தனி வட்டாட் சியர் (தேர்தல்) திருமாவளவன், சேலம் வருவாய் வட்டாட் சியர் மாதேஸ்வரன், சேலம் தெற்கு வருவாய் வட்டாட்சியர் ஆர்த்தி, இளைஞர் செஞ்சிலுவைச்சங்கம், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சங்ககிரி
இதேபோல், சேலம் மாவட்டம், சங்ககிரியில் 10ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சனியன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை சங்ககிரி வட்டாட்சியர் பாலாஜி துவக்கி வைத்தார். சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி பேரணி பழைய எடப்பாடி சாலை, சந்தைப் பேட்டை, புதிய எடப்பாடி சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் வருவாய் கோட் டாச்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் தனியார்  கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

;