tamilnadu

img

தேசிய பெண் குழந்தைகள் தினம் சேலத்தில் கையெழுத்து இயக்கம்

சேலம், ஜன.25- தேசிய பெண் குழந்தை கள் தினத்தையொட்டி,  சேலத்தில் பெண் குழந்தை களை பாதுகாக்க வலியு றுத்தி கையெழுத்து இயக் கத்தை மாவட்ட ஆட்சியர்  சி.அ.ராமன் வெள்ளியன்று துவக்கி வைத்தார்.  பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வியை உறுதி செய்தல் உள்ளிட்ட  நோக்கங்களை  அடிப்படை யாக கொண்டு தேசிய பெண் குழந்தைகள் தினவிழா வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. சேலத்தில் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் 300க்கும்  மேற்பட்டோர் பங்கேற்று, பெண் குழந்தை களை காப்போம் மற்றும் பெண் குழந்தை களை படிக்க வைப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய மிகப்பெரிய கோலத்தை வரைந் தனர். இந்த கோலத்தை சுற்றி கல்லூரி மாணவிகள் நின்றிருக்க மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் நடுவிலேயே நின்றபடி பலூன் களை பறக்க விட்டார். இதைத்தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக கையெழுத்து இயக் கத்தை தொடங்கி வைத்தார். மேலும்  மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப் பட்ட  திட்டங்களில் பள்ளிகள், கல்லூரி களில் சிறப்பாக செயல்பட்ட பெண்கள் குழு வினருக்கும், பெண் குழந்தைகளின் தனித் திறமைகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

;