tamilnadu

img

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1.71 அடி உயர்வு 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,670 கன அடியிலிருந்து 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் காவிரியிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,670 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு, ஞாயிற்றுக்கிழமை காலை 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், டெல்டா பாசனத்திற்கும் வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது . இதனால் , காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

;