tamilnadu

img

மேட்டூர் அணை திறப்புக் காலம்.... டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன?

ஜுன் 12 மேட்டூர் அணை திறப்புக்கான காலம் ஆகும். இது குறுவை  நெல் சாகுபடிக்கு உகந்த காலமாகும். தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 97அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லை. கர்நாடகா சட்டப்படி மாதாந்திரவாரியாக கொடுக்க வேண்டிய நீரை தமிழக அரசு உரிய முறையில் கேட்டுப்பெற வேண்டும். டெல்டாவைப்  பொருத்தவரை காவிரி நீர்,  கடைமடை வரைதடையின்றி செல்ல தூர்வாரும் பணி,தேவையான அளவு விதை நெல், சாகுபடிக் கடன், உரம் கையிருப்பு, தடையில்லாமின்சாரம், இயந்திரங்களின் தேவை, கொள்முதல்,  இந்த 8 அம்சங்களும் தடையின்றி கிடைக்க வேண்டும்.

தூர்வார வேண்டும்
 டெல்டாவில் கல்லணையிலிருந்து காவிரி,வெண்ணாறு,கல்லணை கால்வாய் என 3ஆறுகள் பிரிகிறது. பின்பு 36ஆறுகளாக பிரிந்து அதிலிருந்து 2லட்சம்  வாய்க்கால்கள் பாசனம் பெறுகிறது. சுமார் 1200பாசன ஏரிகள் உள்ளன. இவை அனைத்தையும் முழுவதும் தூர் வார வேண்டும். வெண்ணாறு  போன்ற ஆறுகளில் திட்டுக்கள் உருவாகி ஆற்றின் போக்கும்தடைப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம்அபாயகரத்தை எட்டி யுள்ளது.தமிழகத்திலேயே அதிகமான பாசன ஆழ்துளை கிணறுகள் தஞ்சை 
மாவட்டத்தில் தான் உள்ளன. பல ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. 10ஆண்டுகளாக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். மும்முனை மின்சாரம்24 மணி நேரமும் கிடைக்கவில்லை. ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி நீரைத்தேக்க வேண்டும்.  தொடர்ந்து 10ஆண்டுகளாக நடைபெறும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அரசுஒடுக்க வேண்டும். ஆறு, ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள் தூர்வார போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வெண்ணாறு காவிரி பாசனத்தில் 4.69லட்சம் ஏக்கர் சாகுபடியும் வெண்ணாறுபாசனத்தில்  4.50லட்சம் ஏக்கர் சாகுபடியும், கல்லணைக் கால்வாய் பாசனத்தில்2.27 லட்சம் ஏக்கர் சாகுபடியும் நடைபெறுகிறது.

விதைகள்
 தேவையான விதையில் சுமார் 15% விதைகள் மட்டுமே அரசு தரப்பில்இருந்து கிடைக்கிறது. 85% தனியாரை நம்பி உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா எனப் பல மாநிலங்களிலிருந்து விதைகளைத் தருவித்து தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இவை டெல்டாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ரகங்கள் இல்லை. சென்ற ஆண்டு தெலுங்கானா நெல் விதையான ஆர்என்ஆர் ரக விதைகளை பயன்படுத்திய பல ஆயிரம் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். ஆடுதுறையில் வெள்ளையர் காலத்தில் உருவாக்கப்பட்ட விதை உற்பத்திப் பண்ணை உள்ளது. ஏடிடி வகை விதைகள் நம் மண்ணுக்கு ஏற்றவை. அவற்றை உற்பத்தி செய்த‌ நிறுவனம் தற்போது செயல் இழந்து உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகளை அரசு மானிய‌த்துடன்  வழங்க வேண்டும்.

விவசாயக்கடன்
 டெல்டாவில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இவற்றின் கீழ் பல நூறு கிராமக் கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. விவசாயிகள் கிராம கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ளனர்.  5,000 உறுப்பினர்கள் கொண்ட வங்கியில் 400 விவசாயிகளுக்கு மட்டுமே சாகுபடி கடன்கிடைக்கிறது. மற்ற விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களை நம்பியுள்ளனர்.  அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகளும்விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 1லட்சத்து5ஆயிரம் விவசாயிகள் மட்டுமே கிசான் அட்டை பெற்றுள்ளனர்.

உரம்
உரம் காலத்தில் கிடைக்க வில்லை. மத்திய அரசு உரம் விலையை60% உயர்த்தி விட்டது. 1,200க்கு விற்றடிஏபி உரம் தற்போது 1,900க்கு விற்பனை ஆகிறது.  மானிய விலையில்அனைத்து உரங்களும் கூட்டுறவு வங்கிகள் மூலம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உழவு, நடவு அறுவடை எந்திரங்கள் குறைந்த வாடகைக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க  ஏற்பாடு செய்ய வேண்டும்.  சென்ற ஆண்டு இடுபொருள் மானியம்ஹெக்டேருக்கு  ரூ.20,000 வழங்கு வதாக முந்தைய அரசு அறிவித்தது. தற்போது வரை  தஞ்சை மாவட்டத்தில் சுமார் 10,000விவசாயிகளுக்கு அது கிடைக்கவில்லை. சென்ற ஆண்டிற்கான பயிர்க் காப்பீடு தொகை இதுவரை கிடைக்கவில்லை. திமுக  தனது தேர்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 கரும்பு ஒன்றுக்கு 4,000ரூபாயும் தருவதாக கூறியது; அதை வரவேற்கிறோம். நெல்லுக்கு குறைந்த பட்சம் குவிண்டாலுக்கு ரூ. 3,500 கரும்பு டன் ரூ.5,000 என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

விவசாயத்தொழிலாளர்  வாழ்வு காத்திட...
விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்க விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்த பட்ச கூலிச் சட்டத்தைஅறிவிக்க வேண்டும். 100 நாள் பணியாளர்களை கொண்டு பி,சி,டி,இ வாய்க்கால்களை தூர் வார வேண்டும்.100 நாள் வேலையை 200 நாட்களாக வும் கூலியை ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். டெல்டா மாவட்டவிவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை புதிய அரசு நிறைவேற்றும் என  எதிர்பார்க்கி றோம்.

;