சேலம், மே. 9 - சேலத்தில் ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்து வந்த நபர் வாலிபர் சங்கத்தினரின் தகவலின் பேரில் கைது செய்யப்பட்டார். சேலம் மாநகரம், பொன்னம்மாப்பேட்டை பகுதியை சார்ந்த பரிமளா என்பவர் நியாய விலை கடைகளில் மக் களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச அரிசியை கடத்தி வந்து அதை மாவாக மாற்றி மாநகர பகுதிகளில் உள்ள அப்பளம் கம்பெனிகளுக்கு தொடர்சியாக விற்று வந்துள் ளார். இதையறிந்த வாலிபர் சங்கத்தினர் காவல் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் சம்மந்தப்பட்ட குடோனை பார்வை யிட்டனர். இதில் ரேசன் அரிசி 50 கிலோ, ரேசன் அரிசி மாவாக அரைத்தது 50கிலோ, 3 மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், காவல் துறையினர் சம்மந்தபட்டவர்களை கைது செய்தனர்.