இளம்பிள்ளை, நவ.11- மகுடஞ்சாவடி ஒன்றிய ஊராட்சிகளில் குப்பைகளை எடுத்துச் செல்ல ரூ. 47.12 மதிப்பில் பேட்டரி வாகனம் வழங் கப்பட்டது. சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதி மகு டஞ்சாவடி ஒன்றியத்திற்குட்பட்ட உட்பட்ட 12 ஊராட்சி பகுதி களுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை எடுத்து செல்ல பேட்டரி மூலம் இயங்கும் 19 வாகனங்கள் ரூ. 47.12 லட்சம் மதிப்பில் செவ்வாயன்று வழங்கப்பட்டது. சங்ககிரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.இராஜா கலந்துகொண்டு ஊராட்சி தலைவர்களிடம் வாகனத்தின் சாவியினை ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில், மகுடஞ்சாவடி ஒன்றிய குழு தலை வர் லலிதாராஜா, துணைத்தலைவர் சரஸ்வதி நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பழனிசாமி, மகு டஞ்சாவடி ஒன்றிய ஆணையாளர் வெங்கடேசன், பீடிஓ (கிராம ஊராட்சி) செல்வராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.