சேலம், ஜூன் 1- ஊரடங்கால் பாதித்த ஹோட்டல் தொழிலாள ர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட உண வக உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கொரோனா வைர சால் ஏற்பட்ட பொது முடக்கத்தில் சில தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து வரும் 8 ஆம் தேதி முதல் உணவகங்களில் வாடிக்கை யாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு சேலம் மாவட்ட உண வக உரிமையாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இந்த அறிவிப் பின் படி உணவகம் நடத்த அரசின் வழி காட்டுதல்களை முறையாக பின்பற்ற அனைத்து உணவக உரமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும், தமிழக அரசு உணவகங்கள் நடத்துவதற்கான நேரத்தை இரவு 9:30 மணி வரை நீட்டிக்க வேண்டும். இதேபோல் பொது முடக்கத்தால் வருவாய் இழந்த உண வக தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவா ரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இச்சந்திப்பின்போது சேலம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங் கம் தலைவர் எம்.எஸ்.சண்முகம், பொருளா ளர் பி.எஸ்.ஜெயபால் உள்ளிட்டு நிர்வாகி கள் உடனிருந்தனர்.