tamilnadu

img

ஏற்காட்டில் உயர் அழுத்த மின் விநியோகம்

ஏற்காடு, மார்ச் 1- ஏற்காட்டில், ரூ.45 லட்ச மதிப்பிலான உயர் அழுத்த மின் பாதை அமைக்கப்பட்டு மின் விநியோகம் துவக் கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு – வெள்ளக்கடை பிராதன  சாலை வழியாக மின்சாரம் வழங்க வேண்மென அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஏற்காடு  சட்டமன்ற உறுப்பினர் சித்ரா சட்டசபையிலும் கோரிக்கை  விடுத்துள்ளார். இதனையடுத்து, கடந்த ஒரு மாத காலமாக ஏற்காடு – வெள்ளக்கடை பிராதன சாலையில்  7 கி. மீ., தூரத்திற்கு உயர் மின் அழுத்த பாதை அமைக்கும்  பணி நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் மின் விநியோக பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலை யில், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா,  ஏற்காடு  யூனியன் சேர்மேன் சாந்தவள்ளி, துணை சேர்மேன் சேகர்,  மின்வாரிய ஈரோடு மணடல தலைமை பொறியாளர்  சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, மின் விநியோகத்தை துவக்கி வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில், மேற்பார்வை பொறியார் சண்முகம், செயற் பொறியாளர்கள் சுந்தரி, புஷ்பலதா, உதவி செயற் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், வினோத்குமார் உட்பட மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

;