tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. குற்றச்சாட்டு

சேலம், டிச.31- உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றிக்கு அரசு அதிகாரிகள்  உறுதுணையாக இருக்குமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர் என எஸ்.ஆர்.பார்த்தி பன் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.  சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க வாக்கு எண்ணும் மையங்களில் அதிக எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த வேண்டும். கூடுதலாக காவலர்களை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக  மாவட்ட கழக செயலாளர் சிவலிங்கம் ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித் தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்டம் முதலமைச்சர் மாவட்டம் என்பதால் ஆளும் கட்சியின் வெற்றிக்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருக்கு மாறு கட்டாயப்படுத்துகின்றனர். வாக்குச் சீட்டு எண்ணிக்கையின் போது குளறு படிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அதிக எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.  அதிக எண்ணிக்கையிலான முகவர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட் டால் அதனால் ஏற்படும் அசம்பாவித சம்ப வங்களுக்கு மாவட்ட ஆட்சியரே பொறுப்பு. எனவே ஆட்சியர் நடுநிலைமையோடு தேர்தலில் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். 

;