சேலம், பிப். 20- இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சேலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய் துள்ளனர். சேலம் இட்டேரி சாலையில் டிஎன்ஏ என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஷேர் டிரேடிங் தொழில் செய்து வருபவர்கள் தினகர் அன்பரசு மற்றும் கந்தகுமார். இவர்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய் தால் மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி 1500க்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.31.47 கோடி வசூல் செய்து உள்ளனர். இதில் முதலில் பணம் செலுத்தியோருக்கு மட்டும் ரூ.15 கோடி வரை பணத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, பின்னால் செலுத்தியவர்களுக்கு ரூ.15 கோடி திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து ரூ.2.27 கோடி முதலீடு செய்த மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த நட ராஜன் என்பவர் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை மேற் கொண்ட மாநகர குற்றப்பிரிவு போலீசார் 1500க்கும் மேற்பட்டோரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட தினகர் அன்பரசு மற்றும் கந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.