சேலம், மே 23-சேலத்தில் மே 24, 25 ஆகிய 2 தினங்களுக்கு குடிநீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மேட்டூர் அணையில் செக்கானூர் கதவணைபாராமரிப்புப் பணிகளுக்காக திறக்கப்படுவதாலும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சேலம் மாநகராட்சி சார்பில் பராமரிப்புப்பணிகள் நடைபெறவுள்ளதாலும் இன்று, நாளையும்(மே 24, 25) ஆகிய 2 தினங்களுக்கு தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.