tamilnadu

img

பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

இளம்பிள்ளை, ஜூன் 20-  இளம்பிள்ளை பேரூராட்சி சார்பில் அப்பகுதி பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய அறிவிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப் பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் பேரூராட்சி சார் பில் கொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு துண்டு  பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பிரசுரத் தில் தெரிவித்திருப்பதாவது, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட  மாநிலங்களிலிருந்து யாரேனும் நபர்கள் வந்திருந் தால் தாங்களாகவே முன்வந்து அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்  வீட்டைவிட்டு வெளியே சென்றால் தகவல் கொடுக்க வேண்டும். மேலும், உடல் நிலை பாதிக்கப் பட்டு அல்லது கொரோனா தொற்று அறிகுறியுடன் யாரே னும் உள்ளார்கள் என சந்தேகிக்கும் நபர்களின் விபரம் தெரி விக்க வேண்டும்.

இத்தகைய விவரங்களை உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர், இளம் பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப் படுகிறது என்றார். இதனை தொடர்ந்து வெள்ளியன்று இளம்பிள்ளை பேரூ ராட்சி செயல் அலுவலர் தாமோதரன் தலைமையில் சந்தப் பேட்டை பகுதியில்  சாலையில் செல்லும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு  மேற்கொண்டனர். அப்போது, அனைவரும் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  மேலும், முகக்கவசம் அணியாமல் வருவோர்களிடம் ரூ.100 அபராதம் விதிக்கப் பட்டு அவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட் டது.

;