tamilnadu

பருத்தி செடியில் நோய் தாக்குதல் விவசாயிகள் வேதனை

சேலம்,டிச.28- கெங்கவல்லி பகுதியில் பருத்தி செடியில் காணப்படும் நோய் தாக்குதலால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், கெங்க வல்லி அருகே வீரகனூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடப்பு பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பருத்தி நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் தற் சமயம் செடிகளில் சாம்பல் நோய் தாக்கம் அதிகமாக பரவி வருவ தாக விவசாயிகள் கவலை தெரி விக்கின்றனர். இந்த நோய் தாக்கு தலுக்குள்ளான செடிகள், இலை கள் மற்றும் சபைகள் உதிர்ந்து மக சூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இதுவரையிலும் 5 முறைக்கு மேல் மருந்து அடித்து, 3 முறைக்கு மேல் உரம் வைத்து விட்டோம்.ஆனால், அறுவ டைக்கு தயாராகி உள்ள இந்த வேளையில் சாம்பல் நோய் தாக்கு தலால் மகசூல் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வேளான் அதிகாரிகள் உடனடியாக பாதிக் கப்பட்ட பயிர்களை பார்வை யிட்டு அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும். நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப் பட்டு இழப்பு ஏற்பட்டால், அதனை சரிகட்டும் வகையில் அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றனர்.

;