சேலம், மார்ச் 9- சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் செயல் பட்டு வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத் தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். இந்த பருத்தி ஏலத்திற்கு மொத்தம் 7,500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில், டிசிஎச் ரகம் குவிண்டால் ரூ.6,696 முதல் ரூ.7,909 வரையிலும், பிடி ரகம் ரூ.4,962 முதல் ரூ.5,820 வரையிலும் விற்பனை நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ.1.80 கோடிக்கு ஏலம் நடை பெற்றது என கூட்டுறவு விற்பனை சங்க கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.