tamilnadu

img

வாராக்கடன்களை காரணம் காட்டி ஊதிய உயர்வை மறுக்காதே வங்கி ஊழியர்கள் 2 ஆம் நாளாக வேலைநிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

சேலம், பிப். 1- ஊதிய உயர்வு உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பி னர் இரண்டாம் நாளாக வேலை  நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்க ளுக்கு உரிய ஊதிய உயர்வை அளிக்க வேண்டும். புதிய பென் சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பெரும் நிறுவனங்க ளுக்கு அளித்த கடன்களை வாராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்யக்கூடாது. வங்கிகளிலுள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்ட மைப்பின் சார்பில் வெள்ளியன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. இப் போராட்டம் சனியன்று இரண் டாம் நாளாக தொடர்ந்தது. இதன்காரணமாக, சேலம்  மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் வங்கிப் பணிகள் முழுமையாக பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி  ஊழியர் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். இதில், இந் திய வங்கி ஊழியர் சம்மேளன  மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜேந் திரன், கூட்டமைப்பு நிர்வாகிகள் தீனதயாளன், குணாலன், சம்பத், மணிகண்டன், உமாநாத் உள் ளிட்ட வங்கிகள் கூட்டமைப்பை  சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டனர்.
கோவை
கோவையில் வங்கி ஊழியர் களின் வேலை நிறுத்த போராட் டத்தின் இரண்டாம் நாளான சனி யன்று ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா முன்பு தொடர் முழக்க போராட் டம் நடைபெற்றது. இப்போராட் டத்தில் வங்கி ஊழியர்கள், அதி காரிகள், சங்க மாவட்ட தலைவர் ராஜவேலு, வங்கி பணியாளர் சங்கத்தின் செயலாளர் எம்.வி.ராஜன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் மகேஷ்வரன், என்.ஜெயபாலன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோவை மாவட் டத்தில் சுமார் 800 வங்கிகள் செயல்படவில்லை. ரூ.500 கோடி பரிவர்த்தனையும், ரூ.50 கோடி பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், எங்களின் நியாய மான கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால் ஏற்கனவே அறிவித்த படி மார்ச் மாதம் அடுத்த கட்ட வேலை நிறுத்தமும், ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள் ளதாக தெரிவித்தனர்.

;