tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 நாமக்கல், ஆக.7- மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாமக் கல்லில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக தற்போது அமலில் 44 சட்டங்களை 4 தொகுப்பு களாக குறுக்கும் முயற்சியில் பாஜக அரசு, ஊதிய விதிகள் மசோதா-2019 மற்றும் பணி நிலைமைகள் பற்றிய விதிகள் மசோதா-2019 ஆகிய இரு மசோதாக்களை நிறை வேற்றி உள்ளது. இம்மசோதாக் களை திரும்பப்பெற வேண்டும். சேலம் உருக்காலை, ரயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனி யார்மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலை முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் என்.தம்பிராஜா தலைமை  வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரம், மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்டப் பொருளாளர்  ஏ.கே.சந்திரசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் கு.சிவராஜ், கே. ஜெயராமன், மாவட்டக்குழு உறுப் பினர் பி.சரவணன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.தன சேகரன், போக்குவரத்து கழக மாநில பொதுச் செயலாளர் முருக ராஜ், எல்பிஎப் போக்குவரத்து முன்னாள் செயலாளர் வரதராஜ்  உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

;