இளம்பிள்ளை, ஜூன் 30- சேலம் மாவட்டம், மகுடஞ் சாவடி அருகே இருசக்கர வாக னங்களை திருடிய இரண்டு நபர்களை அப்பகுதி பொது மக்கள் மடக்கி பிடித்து காவ ல் துறையிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், மகுடஞ் சாவடி அடுத்த ஊஞ்சகாடு பகுதியைச் சேர்ந்த பெரி யசாமி மகன் தினேஷ் (24) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்திநிலையில், திடீரென்று வண்டி சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்துள் ளார். அப்போது இரண்டு மர்மநபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை திருடி தப்பிச் சென்றனர்.
இதன்பின் அந்த மர்மநபர்கள் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தை அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பு மகன் கார்த்திக் (23)மற்றும் நாழிகல்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் சிலுவை (23) என தெரியவந்தது. இவர்களிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.