tamilnadu

அண்ணா பதக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், நவ.17- பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு 2021- ஆம் ஆண்டிற்கான அண்ணா பதக்கம் வழங்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 2021 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தமிழக முதல்வர் அவர்களால் வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக பொது மக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு 2021-ஆம் ஆண் டிற்கான அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது. இந்த விருதிற்கான விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat. tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

 விண்ணப்பங்கள் அடங்கிய உரையின் மேல் விருதின் பெயரை குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.  பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், மகாத்மா காந்தி விளையாட்டரங்கம், சேலம் – 636 007 என்ற முகவரியில் நவ.20 ஆம் தேதிக் குள் கொடுக்க வேண்டும்.   மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 74017 03488 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.