tamilnadu

img

அரசு பள்ளிகளை பாதுகாத்திடுக அனைத்திந்திய இளைஞர், மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 7- அரசு பள்ளிகளை பாது காக்க வேண்டும் மற்றும் கல்வி வியாபாரத்தை தடுத் திட வேண்டும் என வலியு றுத்தி அனைத்திந்திய  இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு பள்ளிகளை தனி யாருக்கு தாரைவார்க்கும் முடிவினை  அரசுகைவிட வேண்டும். அரசு பள்ளி  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களை பாதுகாத்திட வேண்டும். அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு தொடக்க பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கிட வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கைக்கு  தகுந்தாற்போல் அரசு கல்லூரிளை அமைத்திட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இந்தி மொழி கட்டாயம் என்பதை கண் டித்து வெள்ளியள்று அனைத்திந்திய இளை ஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பெரு மன்ற மாவட்ட செயலாளர் ரமேஷ், மாண வர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தினேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.

;