tamilnadu

மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாட அனுமதித்திடுக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு

சேலம், ஏப்.25-மே 1 தொழிலாளர் தினத்தில் கொடியேற்றி உழைப்பாளர் தினத்தை கொண்டாட அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம்உலகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட இருக்கிறது. இச்சூழலில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடைமுறைகள் இருப்பதன் காரணத்தால் கட்சி கொடிக்கம்பங்கள், தலைவர்களின் சிலைகள் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விழாவை சேலத்தில்சிறப்பாக கொண்டாடவும், அதையொட்டி கொடிகளை ஏற்றவும் அனுமதிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டஆட்சியர், மே தினத்தைக் கொண்டாட அனுமதி தருவதாகவும், அந்தந்த காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மே தினத்தை கொண்டாட அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகள் மே தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை செய்திடவும், அன்று மாலை கோட்டை மைதானத்தில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சேலம் மாவட்ட குழு சார்பில் மாவட்டசெயலாளர் பி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;