tamilnadu

img

சேமிப்பு மற்றும் பிறந்த நாள் நிதியை அளித்த சிறுவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழு வதும் தேர்தல் நிதி வசூல் உற்சாகமாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. 

சாலையோர வியாபாரிகள், வர்த்தகர்கள், சிறு தொழில் முனைவோர், ஆலைத்தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் தாமாக முன்வந்து நிதியளித்து வரு கின்ற செய்திகள் கிடைத்த வண்ணம் உள்ளது. இந்த  நிலையில்  கிருஷ்ணகிரி  மாவட்டம் தேன்கனிக்கோட்டை யை சேர்ந்த முருகேசன் -ஸ்ரீ நித்யாவின் 2 ஆம் வகுப்பு  படிக்கும் ஏழு வயது மகன் சித்தார்த் யோகன் கடந்த ஓராண்டாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1350 ரூபாயை மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக அளித்தார்.

அதேபோல் தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள திப்பசந்திரம் கிராமத்தில் வசிக்கும் முத்துக்குமார் - நித்யா வின் 2 வயது மகன் கவின் பிறந்த நாளுக்காக வைத்திருந்த  3000 ரூபாயை மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக வழங்கினார். இந்த சிறுவர்கள் இருவரும் கட்சியின் மாவட்  டக்குழு அலுவலகத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளிடம் இந்த நிதியை வழங்கினர். 

மார்க்சிஸ்ட் கட்சியின் பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரண மாக மனமுவந்து நிதியளித்த சித்தார்த்யோகன், கவின் ஆகியோரையும் அவர்களின் பெற்றோர்களையும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டினார்.