tamilnadu

img

இளம் மரபணுவியலாளர் டாக்டர் சம்பத்குமாருக்கு விருது

சென்னை, அக்.4 டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் - மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து டாக்டர் சம்பத்குமார் ரங்கசாமிக்கு  மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் சிறந்த முன்னாள் மாணவருக்கான விருதை  வழங்கி கவுர வித்துள்ளன. முதலாம் ஆண்டாக இந்த விருதை  டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் - மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து துவக்கியுள்ளன. நீரிழிவு ஆராய்ச்சி துறை யில் மேற்கொண்ட ஆராய்ச்சி க்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது சம்பத்குமார், அமெரிக்காவின் அரிசோனா மாநில தலைநகர் பீனிக்ஸ் டிரான்ஸ்லேஷனல் ஜெனோ மிக்ஸ் ஆராய்ச்சி நிறுவன த்தின் நியூரோ ஜெனோ மிக்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.  மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மையத்தில் பி.எச்டி. செய்த முன்னாள் மாணவர்களின் சிறப்பான பணிகளை அங்கீக ரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது குறித்து மெட்ராஸ் நீரி ழிவு ஆராய்ச்சி அறக்கட்ட ளையின் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில், நீரிழிவு ஆராய்ச்சி துறை யில் சிறந்து விளங்கிய தற்காக டாக்டர் சம்பத்குமார் ரங்கசாமியை கவுரவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகி றோம் என்றார். மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் பி.எச்டி பட்டம் பெற்ற மாண வர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் மற்றும் பொதுத்துறை பணிகளில் சிறந்து விளங்கி வருகின்ற னர் என்றும் அவர் கூறினார்.