tamilnadu

img

மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராபி, ரேடியோ தெரபி டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, கிளினிக்கல் நியூட்ரிசியன் போன்ற பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை www.tnhealth.tngov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 10 ஆம் தேதி மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

;