tamilnadu

பைக் மீதி லாரி மோதியதில் பெண் பலி

அம்பத்தூர், மார்ச் 5-அம்பத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டு செல்லியம்மன் நகரில் வசிப்பவர் சேட்டு. இவரது மனைவி சகுந்தலா (55). இருவரும் கட்டட தொழிலாளர்கள். வழக்கம் போல் புதன் கிழமை வேலைக்குச் சென்று இரவு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி விசப்பட்டனர். இதில் சகுந்தலா லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சேட்டுவுக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சகுந்தலாவை மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சேட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி, லாரி ஓட்டுநர் தசரதன் (51) என்பவரை கைது செய்தனர்.