tamilnadu

பணப்பயன்கள் கிடைக்காமல்

சென்னை, ஜூன் 23- திருவொற்றியூர் -  எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களுக்கு பணப்பயன்கள் கிடைக்காததால் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல்  அவதிப்படு கின்றனர். எண்ணூர் அனல்மின் நிலையம் 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதில் 5 அலகுகளுடன்  420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சாரம் விநியோ கிக்கப்பட்டது.  இந்நிலையில், பல்வேறு காரணங்களா லும், அலகுகள் பழுதடைந் ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  நிரந்தர மாக எண்ணூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கு பணியாற்றிய 470 ஊழியர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1, 2 ஆகிய பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டனர்.

இடமாறுதல் பெற்றாலும் இவர்க ளுக்கான ஊதியம் மற்றும் பணப்பயன்கள் எண்ணூர் அனல் மின் நிலையத்திலேயே வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் வருங்கால வைப்புநிதி,  1 கோடிக்கு மேல் ஈட்டு விடுப்பு, 65 லட்சத்துக்கு மேல் மின் உற்பத்தி ஊக்கத்தொகை போன்ற பணப்பயன்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால்  தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம், அவசர மருத்துவ உதவி போன்ற வற்றிக்கு பணமில்லாமல்  அவதிப்படுவதாக தொழிலாளர் கள் கூறுகின்றனர். இது குறித்து கேட்டால்  தலைமை அலுவலகத்திலிருந்து எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு நிதி வரவில்லை என  அதிகாரிகள் கூறுவதாக ஊழியர்கள் கூறு கின்றனர்.  மேலும் தொழிலாளர்களுக்கு கடன் வழங்காமலேயே அதற்கான தவணைத் தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடன் மற்றும் பணப் பயன்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் மின்வாரியத்தை கண்டித்து, குடும்பத்தோடு போராட்டம் நடத்துவோம் என மின்வாரிய அதிகாரிகளுக்கு  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அவைப்பு (சிஐடியு)  செயலாளர் கே.வெங்கட்ஐயா தெரிவித்துள்ளார்.