tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : எழுத்தாளர் தங்கப்பா பிறந்தநாள்....

ம. லெ. தங்கப்பா 1934ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாள் பிறந்தார்.

கல்லூரி நாட்களில், தாகூர், பாரதிதாசனின் படைப்புகளால் இவர் மிகவும் கவரப்பட்டார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, புதுவையிலேயே குடியேறி, அங்கு பல்வேறு கல்லூரிகளில் 25 ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.இவர் எழுதிய ‘சோலைக் கொல்லைப் பொம்மை’ நூலுக்காக, 2010 ஆம் ஆண்டு குழந்தைகள் இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.love stands alone (பெங்குயின் வெளியீடு) எனும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு நூலுக்காக 2012இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். தமிழக அரசின் பாரதிதாசன் விருது, சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் மொழிபெயர்ப்பு விருது,சிற்பி இலக்கிய விருது ஆகியவற்றைப் பெற்றவர் தங்கப்பா.

இவர் 2018 ஆம் ஆண்டு மே 31 அன்று உடல்நலக்குறைவால் தன் 84 ஆம் வயதில் புதுச்சேரியில் காலமானார். இவரது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெரணமல்லூர் சேகரன்

;