tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் இன்று பதவி ஏற்பு

சென்னை,ஜன.5- புதிதாக தேர்வு செய்யப் பட்டுள்ள உள்ளாட்சி பிரதி நிதிகள் அனைவரும் திங்களன்று (ஜன.5) பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்  களாக தேர்தல் நடத்தப்பட் டது.ஊராட்சி தலைவர், உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு நேரடியாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் பதவிகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்குட் பட்ட 5,090 வார்டு உறுப்பி னர்கள், 9 ஆயிரத்து 624 ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மீதம் உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பிரதிநிதி கள் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கட்சி சின்னங்கள் அடிப்படை யில் தேர்தல் நடத்தப்பட்டது. 515 மாவட்ட ஊராட்சி வார்டு களில் தி.மு.க. கூட்டணி 271 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 240 இடங்களையும் பிடித்துள்ளன. 314 ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு உட்பட்ட 5090 வார்டு களில் தி.மு.க. கூட்டணி 2356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 2199 இடங்களில் வென்றுள்ளது. மற்ற கட்சியி னர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 512 இடங்களை பிடித்துள்ளனர். புதிதாக தேர்வு செய்யப் பட்டுள்ள உள்ளாட்சி பிரதி நிதிகள் அனைவரும் ஜன.6 ஆம் தேதி பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சிகளை பொறுத்த வரையில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கூட்டணி கள் தலா 13 மாவட்டங்களை கைப்பற்றி உள்ளன. இத னால் இந்த மாவட்டங்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்தவர்களே துணைத் தலைவர் பதவி களை பிடிப்பது உறுதியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத் தில் மட்டும் இழுபறி நிலை நீடிக்கிறது. அந்த மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 மாவட்ட ஊராட்சி களில் 8 இடங்களில் அ.தி. மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 6 இடத்தையும், காங்கிரஸ் 2 இடத்தையும் பிடித்துள்ளன.சரிசமமான இடங்களை பிடித்துள்ள தால் அங்கு மட்டும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பத வியை பிடிப்பது யார்? என்கிற கேள்விக்கு விரைவில் விடைகிடைத்துவிடும்.
ஜன.11ல் மறைமுகத் தேர்தல் 
உள்ளாட்சி தலைவர் பதவிகளில் ஊராட்சி மன்றத்  தலைவர்கள் மட்டும் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட் டுள்ளனர். ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலை வர், மாவட்ட ஊராட்சி தலை வர், துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கு வருகிற 11ஆம் தேதி மறை முக தேர்தல் நடைபெறு கிறது. உள்ளாட்சித் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப் பட்டுள்ள உறுப்பினர்கள் இவர்களை தேர்வு செய்ய வார்கள். தி.மு.க. கூட்டணி யில் 2356 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் 2199 உறுப்பினர்கள் உள்ள னர். 515 பேர் மற்ற கட்சிகளிலும், சுயேட்சை யாக போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

;