tamilnadu

img

மதச்சார்பற்ற அரசை ஏற்படுத்துவோம் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேட்டி

மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாகவும் மத்தியில் மதச்சார்பற்ற அரசு உருவாக்க திமுக பாடுபடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 17வது நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தலுக்காக திமுக தேர்தல்அறிக்கையும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிக்கை யையும் செவ்வாயன்று (மார்ச் 19) மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில்ஆளும் பாஜக நாட்டின் பொருளா தாரத்தை முற்றிலும் சீர்குலைத்து விட்டதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் மொத்த உள் உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகை யில் சரிந்துவிட்டது. நாடு இதுவரை சந்தித்திராத வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் கடுமையாக அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வேளாண் துறையும், அமைப்பு சாரா துறைகளும் வெகுவாக நலிந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், அதிமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள கேடுகளையும், ஊழல்களையும் மத்திய பாஜக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. அதிமுக அரசுக்கு ஆதரவு அளிப்பதோடு ஊழல் புகார்களைப் பற்றி கவலைப்படாமல் பாதுகாப்பதால் தமிழகத்தின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தமிழக அரசின் கடன் பன்மடங்கு உயர்ந்து இருப்பதே இந்த மோச மான நிர்வாகத்துக்கான சாட்சியாக உள்ளது. திமுக சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையின் வாயிலாக நேர்மை பிறழாத, நடுநிலையான நிர்வாகத்தையும் மதச் சார்பற்ற அரசை உருவாக்க நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் ஸ்டாலின் 

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது தொடர் பிரச்சாரத்தை இன்று (மார்ச் 20) திருவாரூரில் துவக்குகிறார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்தும் முதற்கட்டமாக தமது பிரச்சாரத்தை திருவாரூரில் துவக்கும் மு.க.ஸ்டாலின், புதனன்று காலை 10 மணி அளவில் நாகை நாடாளுமன்றத் தொகுதி மற்றும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி சிபிஐ மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மாலையில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

;