tamilnadu

விநாயகர் ஊர்வலத்திற்கு தடை ஏன்? முதல்வர் விளக்கம்....

சென்னை:
தமிழ்நாட்டில் விநாயகர் ஊர்வலத்திற்கும் பிற சமய விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.அப்போது, கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.  நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது” என்றார்.

தமிழ்நாட்டிலும் இன்றுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முழுமையாகத் தடுக்கப்படவில்லை; அங்குமிங்கும் கொஞ்சம் இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. எனவேதான் அனைத்து சமய விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் பொருந்தும் என்றும் முதலமைச்சர் கூறினார்.பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழாக் கொண் டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளே தவிர, தங்கள் இல்லங்களில் கொண் டாடலாம். ஆகவே, யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.      

;