tamilnadu

யார் சட்டத்திற்கு புறம்பானவர்கள்?

வாசர் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். 21 வருசமாக இந்த ஹார்டுவேர் தொழில்ல இருக்கிறேன். நானும், என் மனைவியும் மட்டும் உற்பத்தியில ஈடுபடுறோம். புதுசா மூலப்பொருள் வாங்கி விற்றால் லாபம் இல்லை. பழையதை ஒரு டன் ரூ.3600க்கு வாங்கி வாசர் உற்பத்தி செய்து ஒரு கிலோ ரூ.57க்கு கொடுக்கிறோம். ஜிஎஸ்டி வந்தப்புறம் ஆடிட்டரின் செலவு போக மாசம் ரூ.2000லிருந்து 4000 வரைக்கும் வரியா கட்டுறேன். அதையும் அவரே வாங்கி கட்டியிடுவாரு என கூறினார். அவரிடம், நீங்கள் குறு தொழில் செய்பவர்தானே. ரூ.40 லட்சம் வரை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு உள்ளதே எனக்கேட்டபோது, அது எல்லாம் தெரியாது. இன்னீக்கு வரைக்கும் மாச, மாசம் வரி கட்டிட்டுத்தான் இருக்கேன். எதுவும் திருப்பி வாங்கினது இல்லையே என்றார். (இப்படித்தான் கோவையில் குறு, சிறு தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் பலர் ஜிஎஸ்டியால் தாங்கள் ஏமாற்றப்படுவதையும், வஞ்சிக்கப்படுவதையும் உணராமலே உள்ளனர். இவர்களைத்தான் அரசை ஏமாற்றம் சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்கிறாரா கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்.)

;