சென்னை:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 2 வது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு தவிர்த்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில்2991 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1057 இடங்களும் உள்ளன.இதுதவிர்த்து, புதிதாக கட்டப்பட்டு வரும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1650 மருத்துவ படிப்புக்கான இடங்களும் இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.இந்த நிலையில், நவம்பர் 2வது வாரத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங் கும் என்றும், அதற்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோக தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப் படும் என தகவல் வெளியாகியுள்ளது.