tamilnadu

img

நாம ஜெயிக்கிறோம் தோழர்... தோழர் ஏ.ஜி.காசிநாதன் உடல் தகனம்....

சென்னை:
“நாம ஜெயிக்கிறோம் தோழர்” என முஷ்டியை உயர்த்தி தோழர்களுக்கு எப்போதும் நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்த, மறைந்த தோழர் ஏ.ஜி.காசிநாதன் உடல் சென்னையில் ஞாயிறன்று (பிப்.14) தகனம் செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினரும் சிஐடியு மாவட்ட துணைத்தலைவருமான தோழர் ஏ.ஜி.காசிநாதன் (72) உடல் நலக்குறை வால் சனிக்கிழமையன்று (பிப்.13) காலமானார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சென்னை - செங்கல்பட்டு மாவட்டக் குழுவிலும், ஒன்றுபட்ட சென்னை மாவட்டக்குழுவிலும், வட சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.  சிஐடியு அகில இந்திய செயற்குழு உறுப்பினர், வடசென்னை மாவட்டச் செயலாளர் என பணியாற்றினார். மத்தியசென்னை மாவட்டம் தொடங்கப்பட்ட வுடன் துணைத் தலைவராக பணி யாற்றினார். சுமார் 47 ஆண்டுகள் தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார். தோழர் ஏ.ஜி.காசிநாதனுக்கு அங்கையற்கண்ணி என்கிற மனைவியும், உஷா என்கிற மகளும், வாஞ்சிநாதன் என்கிற மகனும் உள்ளனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள காசிநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், க.கனகராஜ், என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), சி.சங்கர் (காஞ்சிபுரம்), மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், சி. கல்யாண சுந்தரம், ஆர்.வேல்முருகன், வே.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. வனஜகுமாரி, எஸ். வெள்ளைச்சாமி, எஸ். குமார், எம். செந்தில்குமார், (தென்சென்னை), இரா. முரளி, எஸ்.கே. முருகேஷ், இ. சர்வேசன், கே. முருகன், எம். தாமு, (மத்தியசென்னை), எம்.ராம கிருஷ்ணன், ஆர்.ஜெய ராமன், விஜயகுமார், கார்த்தீஸ்குமார் (வடசென்னை), ஆலந்தூர் பகுதிச் செயலாளர் எஸ். அரிகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் எம்.வி. கிருஷ்ணன், டி. நந்தகோபால், டி. ராமன், சிஐடியு துணைப்பொதுச் செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன்,துணைத் தலைவர் கே.ஏ.கிருஷ்ண மூர்த்தி, மாநிலச் செயலாளர் இ.முத்துக் குமார், மாவட்ட நிர்வாகிகள் எம்.சந்திரன், சி.திருவேட்டை, எஸ்.சந்தானம் (மத்தியசென்னை), பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை), டி. ஸ்ரீதர் (காஞ்சிபுரம்), அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர்கள் துரை, தயானந்தம், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க பொதுச் செயலாளர் பி.சீனிவாசுலு, மருந்து விற்பனைபிரதிநிதிகள் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ்சுந்தர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க தலைவர் நெ.இல.சீதரன் உள்ளிட்டு கட்சி, வர்க்க, வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல்
கட்சியின் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், ஏ.கே.பத்மநாபன்,  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மூத்த தொழிற்சங்க தலைவர் டி.என்.நம்பிராஜன் உள்ளிட்டோர் தோழர் ஏ.ஜி.காசிநாதனின் சம்பந்தியான அ.சவுந்தரராசனுக்கு தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.

நெறி தவறாத கம்யூனிஸ்ட்
தலைவர்கள், தொழிலாளர்கள் செலுத்திய அஞ்சலிக்கு பின்னர் தோழர்காசிநாதன் உடல் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கீழ்க்கட்டளை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில்பேசிய அ.சவுந்தரராசன், “நேர்மையாக, நெறி தவறாத கம்யூனிஸ்ட்டாகதோழர் ஏ.ஜி.காசிநாதன் இருந்தார். பலவிதமான மனிதர்களை தொழிற்சங்க மாக திரட்ட, நிர்வாகத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்க  வேண்டுமெனில், அந்த தொழில் குறித்து நுணுக்கமாக தெரிந்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் அவர் ஒருங்கே பெற்றிருந்தார்”என்றார். சிபிஎம்  வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன் குறிப்பிடுகையில், “தொழிற்சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும்போது கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து நிர்வாகத்தை இணங்க வைப்பார்.அவரின் லட்சியத்தை பின்பற்றுவோம்”என்றார். சிஐடியு தலைவர் லெனின்சுந்தர், எச்டிஎல் ஊழியர்  சங்க முன்னாள் தலைவர் கே.பி.பாபு மற்றும் வி.தனலட்சுமி (மாதர் சங்கம்), டி.சந்துரு, மிருதுளா (மாணவர் சங்கம்) உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் உரையாற்றினர்.
 

;