tamilnadu

img

வீடுகளில், தெருக்களில் வழிந்தோடும் கழிவு நீர்

கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

காஞ்சிபுரம், ஜூன் 26 - காஞ்சிபுரத்தில் பெரும்பாலான இடங்க ளில் புதை வடிகால் பழுந்தடைந்துள்ளதால்  ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. காஞ்சிபுரம் பெருநகராட்சியின் கழிவு நீர் துறையினர் முறையாக செயல்படாத தால், பஞ்சுப் பேட்டை, ஏகாம்பர புரம்  வடக்கு மாட வீதி, பெருமாள் தெரு,  மளிகை தெரு, சிவகாஞ்சி காவல் நிலையம்  பின்புறம் உள்ள அங்காளம்மன் தெரு, காலண்டர் தெரு போன்ற பகுதிகளில் வீடு களில் கழிவு நீர் தேங்கியுள்ளது. சாலை களில் உள்ள புதை வடிகால் தொட்டிகளி லிருந்து கழிவுகள் வெளியேறி ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து நகராட்சிக்கு பொது மக்கள் அவ்வப்போது புகார் தெரி வித்தாலும், நகராட்சி அதிகாரிகள் மேம்போக்காக வந்து பார்வையிட்டு, கட மைக்கு சுத்தம் செய்து விட்டு செல்கின்ற னர் என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வீடுகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலைகளில் மட்டுமின்றி வீடுகளில் துர்நாற்றம் வீசுகி றது. கொசு தொல்லையும் அதிகரித்துள் ளது. நகராட்சியின் கழிவுநீர் பராமரிப்பு தனி யாரிடம் விடப்பட்ட பிறகும், கழிவு நீர் பிரச்சனை தீரவில்லை. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் முறை யாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால்  அங்கு வரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நத்தப்பேட்டை ஏரிக்கு அருகிலுள்ள வயல்வெளிகளில் விடப்படுகிறது. இத னால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலை யம் பின்புறம் உள்ள மோகனா (60) கூறும்போது, கழிவு நீர் சாலைகளில் ஓடு வதை அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு போட்டோ எடுத்துச் செல்கின்றனர். ஆனால்  சரி செய்வதில்லை. இதனால் இந்தப் பகுதி யில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஒரு  மாதத்துக்கும் மேலாக இந்நிலை நீடிக்கி றது. கழிவுநீர் வெளியேறுவதை விரைந்து  சரிசெய்யாவிடில் ஊர்மக்கள் ஒன்று திரண்டு போராடும் நிலை ஏற்படும் என்றார்.