tamilnadu

img

சித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டாரா டேனிஷ் சித்திகி?

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திகி  தாலிபன் தீவிரவாதிகளால் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் தலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடக்கும் போரைப் பதிவு செய்வதற்காக ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படையுடன் போர் நடக்கும் பகுதிக்குச் சென்றார்.
போர் குறித்த செய்திகளை சேகரித்து கொண்டிருந்த போது  தலிபான்கள் தாக்குதலில் டேனிஷ் சித்திகி பலியானார். டேனிஷ் மறைவிற்கு பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து  தலிபான்கள் சார்பில் சித்திகி அப்பகுதியில் இருந்த தகவலை அரசு தெரிவிக்கவில்லை. தெரிந்திருந்தால் தாக்குதலை நடத்தியிருக்க மாட்டோம் என்றனர். மேலும் சித்திகியின் மரணத்திற்கு மன்னிப்பும் கேட்டனர். 
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று டேனிஷ் சித்திகி இருப்பது தெரிந்து கொண்டுதான் தலிபான்கள் அவரைக் கொன்றனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என செய்தி வெளியிட்டது. இந்நிலையில் தற்போது டேனிஷ் சித்திகி உடற்கூறாய்வு முடிவு வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் டேனிஷ் உடலில் 12 குண்டுகள் பாய்ந்திருந்தன. முகத்திலும் மார்பிலும் வாகனங்களை ஏற்றி எலும்புகள் உடைந்திருந்தது
மேலும் டேனிஷின் இறந்த உடலை வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதிலிருந்து தலிபான்கள் கொடூரமாக சித்தரவதை செய்து டேனிஷ்சை கொலை செய்திருக்கின்றனர் என அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது 

;