tamilnadu

விவோ புதிய ஸ்மார்ட்போன்

விவோ புதிய ஸ்மார்ட்போன்

சென்னை, ஜூன் 22-  உலகளாவிய ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ தனது ஒய் மாடல் வரிசையில் புதிய ஒய் 58 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் எல்சிடி டிஸ்ப்ளே உடன் சூரிய ஒளியிலும் பார்க்கும் வசதியுடன் வருகிறது. மேலும் 50 எம்பி ஏஐ போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் சக்திவாய்ந்த 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் கவர்ச்சிகரமான கேமரா பேனலைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியான வடிவ மைப்புடன் ஹிமாலயன் ப்ளூ மற்றும் சுந்தர்பன்ஸ் கிரீன் ஆகிய இரண்டு வண் ணங்களில் கிடைக்கிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கார்டு உடன் 19,499 ரூபாய் விலையில் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் அனைத்து சில்லரை விற்பனை ஷோரூம்களிலும் கிடைக்கிறது.