tamilnadu

விழுப்புரம் மற்றும் குழித்துறை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

விழுப்புரம், ஜன.31- விழுப்புரத்தில் வரும் 2 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு தடகளம் மற்றும்  குழு விளையாட்டுப் போட்டிகள் நடக்க வுள்ளது, இது குறித்து மாவட்ட ஆட்சியர்  ஆ.அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவி லான விளையாட்டுப் போட்டிகள் வரும் பிப்ர வரி 2 ஆம் தேதி நடக்கிறது. இதில் தடகளம்,  குழு விளையாட்டுப் போட்டிகள் ராம கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.  இந்த தடகளத்தில் கை, கால் ஊன முற்றோர் (ஆண்கள், பெண்கள்) 50, 100 மீ.,  ஓட்டம், குண்டு எறிதல், 100 மீ., ஓட்டம் சக்கர  நாற்காலி, மற்றும் பார்வையற்றோர் (ஆண்கள், பெண்கள்) 50, 100 மீ., ஓட்டம்,  நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல்,  மழுமைப்பந்து எறிதல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் (ஆண்கள், பெண்கள்) 50, 100 மீ., ஓட்டம், மழுமைப்பந்து எறிதல்,  நின்ற நிலையில் தாண்டுதல், காதுகேளா தோர் (ஆண்கள், பெண்கள்) 100, 200 மீ., ஓட்டம்  நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ.,  ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறகு பந்து போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டை யரும், மேஜைப்பந்து போட்டியில் ஒரு  அணியில் இரண்டு பேரும், பார்வை யற்றோர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான கையுந்து பந்து போட்டியில் ஒரு  அணியில் ஏழு பேரும், மனநலம் பாதிக்கப் பட்டவர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான எறிபந்து போட்டியில் ஒரு அணியில்  ஏழு பேரும், காதுகேளாதோர் பிரிவில் ஆண்  கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி யில் ஒரு அணியில் ஏழு பேரும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ள அங்கீக ரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச்சான்று, மாவட்ட மாற்றுத்திற னாளி மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப் பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தடை இல்லா சான்று அளிக்கப்பட வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. மேலும், மாவட்ட போட்டிகளில் முதலி டத்தைப் பெறுபவர்கள் மாநில அளவிலான  போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியான வர்களாவர். மேலும் விபரங்களுக்கு 740170 3485 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

மேலவளவு கொலை வழக்கு: விசாரணை நீதிபதி விலகல்

மதுரை, ஜன.31- மேலவளவு கொலை வழக்கு  விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற நிர்வாக நீதிபதிக்கு விசா ரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பரிந்துரைத்துள்ளதோடு வழக்கு விசாரணையிலிருந்து தாம் விலகிக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார். கடந்த 1996-ஆம் ஆண்டு ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த முரு கேசன்  மேலவளவு ஊராட்சித் தலை வர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோ தம் காரணமாக  முருகேசன் உட்பட  ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட னர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு  விழாவை முன்னிட்டு இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட  13 சிறைவாசிகளை தமிழக அரசு விடு தலை செய்த்து. இந்த நிலையில், வழக்கறிஞர்  ரத்தினம் அதை எதிர்த்து வழக்குத் வழக்கு தொடர்ந்திருந்தார் இந்த  வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விடுதலையான 13 பேரும் மதுரை மாவட்டம் மேலவளவு கிரா மத்தில் இருந்து வெளியேறி வேலூர்  மாவட்டத்தில் தங்கியிருக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தி ருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதி பதி சுந்தர், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன் விசாரணைக்கு பட்டியில் இடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வியாழ னன்று நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்,   ஜெகதீஸ் சந்திர முன்விசார ணைக்கு வந்தபோது எஸ்.எஸ். சுந்தர் இதே வழக்கில் ஏற்கனவே விசா ரணை செய்து ஒரு உத்தரவு  பிறப்பித்துள்ளதால்  தான் இந்த வழக்கை விசாரிக்க வில்லை.  இந்த  வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதற்காக மதுரை உயர்நீதி மன்ற நிர்வாக நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார்.

விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை, ஜன. 31- திருவண்ணாமலை மாவட்டத்தில் கபடி, இறகுப் பந்து  போட்டிகளில் வெற்றி பெற்ற   செய்யாறு அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்க பாராட்டு தெரிவிக்கப் பட்டது. திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மை யில் நடைபெற்றன. இதில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான கபடிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தைப்  பெற்றனர்.  இதேபோன்று, இறகுப் பந்து போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றனர். இரு போட்டி களிலும் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்ற  மாணவர்களுக்கும்,  பயிற்சி அளித்த  ஆசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்  (பொ) எம்.எஸ்.சுகானந்தம் வாழ்த்தி பாராட்டினார்.

‘கேத் லேப்’ வசதி: கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ  கோரிக்கை

சிதம்பரம், ஜன. 31- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான கேத் லேப் வசதி செய்து தருமாறு சுகாதாரத்துறை அமைச்சரிடம் சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு கொடுத்தார். அதிமுக கடலூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அண்ணாமலை  பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில்  பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம், சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கானூர். பாலசுந்தரம் ஆகியோர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவில் அந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில்  வெடி விபத்து ஐந்து அறைகள்  தரைமட்டம்

சிதம்பரம், ஜன. 31- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான கேத் லேப் வசதி செய்து தருமாறு சுகாதாரத்துறை அமைச்சரிடம் சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு கொடுத்தார். அதிமுக கடலூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அண்ணாமலை  பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில்  பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம், சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கானூர். பாலசுந்தரம் ஆகியோர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவில் அந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

குழித்துறை, ஜன.31- கன்னியாகுமரி மாவட்டம் வருவாய்த்துறை பறக்கும்  படையினர் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது மரமடி சாலையோரத்தில் சந்தேகத்  திற்கு இடமாக டார்ப்பாளால் மூடப்பட்டிருந்த இடத்தை  சோதனை செய்தபோது சிறுசிறு மூடைகளில் சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக தயார் நிலை யில் பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து  அரிசியை பறிமுதல் செய்தனர். உடையார்விளை அரசு  கிட்டங்கியில் அரிசி ஒப்படைக்கப்பட்டது. கடத்திச் செல்வ தற்கு அரிசியை பதுக்கிய நபர் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

தமிழக ஹாக்கி அணிக்கு அரசுப் பள்ளி மாணவர் தேர்வு 

வாடிப்பட்டி ஜன.31- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள  பாண்டியராஜபுரம் மதுரை சர்க் கரை ஆலை அரசு மேல்நிலைப்  பள்ளி மாணவர் தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பிப்ர வரி 4-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதிவரை ஹாக்கிப் போட்டி கள் நடைபெறுகிறது. அதில் 14 வயதுக்குட்பட்ட தமிழக ஹாக்கி  அணியில் விளையாட பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை  மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

;