விழுப்புரம், ஜூலை 12- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10 அன்று நடை பெற்றது. 276 வாக்குச் சாவடி களில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் (82. 48 சதவிகிதம்) வாக்களித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழ மை (ஜூலை 13) அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. முதலாவதாக அஞ்சல் வாக்குகள் எண்ணப்படு கின்றன. அதன் பிறகு 30 நிமி டங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத் தில் பதிவாகியுள்ள வாக்கு களின் எண்ணிக்கை தொடங்குகிறது.
இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 20 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் உள்பட 29 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஒவ்வொரு சுற்று முடி வில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.