tamilnadu

img

விஜயகாந்துக்கு கொரோனா இல்லை....

சென்னை:
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன் கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்துச் சிலப் பொய்யான தகவல்கள் பரவின.இதனால் தேமுதிக தலைமை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், ‘‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென் னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.தற்போது, கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனையில், விஜயகாந்துக்குக் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சிடி ஸ்கேன் பரிசோதனையிலும் கோவிட் நிமோனியா அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

;