tamilnadu

வேலூர் மற்றும் சென்னை முக்கிய செய்திகள்

குடியாத்தம் அரசு மகளிர் நூலகத்திற்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. ரூ.50 லட்சம் நிதி

வேலூர், ஜன. 18- வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்ச னூர் அழகு பெருமாள் கோயில் தெருவில் உள்ள தனது வீட்டை அரசு மகளிர் நூலகம் அமைக்க ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் க.நட ராஜன் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டை தான மாக வழங்கினார். இந்த வீடு நூலமாக மாற்றப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி  வருகிறது. இந்த இடத்தில் மிகப் பெரிய கட்டடத்து டன் நூலகம் அமைக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜனிடம் குடியாத்தம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. அதன்பேரில் நூலகத்தில் தரைதளம், முதல் மாடியுடன் நூலகம் அமைக்க ரூ.50 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான பரிந்துரையை அரசுத் துறைகளுக்கு டி.கே.ரங்கராஜன் அளித்துள்ளார். நிதி ஒதுக்கீடு செய்த டி.கே.ரங்கராஜ னுக்கு நகரக் குழு செயலாளர் பி.காத்தவ ராயன் நன்றி தெரிவித்துள்ளார்.

தனியார் பால் விலை  நாளை முதல் உயருகிறது

சென்னை,ஜன.18- தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84 சதவிதம் தனி யார் பால் நிறுவனங்களும் 16 சத வீதம் அரசின் ஆவின் பால் நிறுவன மும் ஈடுபட்டு வருகிறது. தனியார்  பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு  3 முறை பால் விலையை உயர்த்தி யது. இந்த நிலையில் புதிய ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாக அதன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ள தால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது. ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறு வனங்கள் திங்கட்கிழமை (ஜன.20) முதல் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன. பால் விலை  லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையி லும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்தப்படுகிறது. சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர்  ரூ.48-லிருந்து ரூ.50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.52-லிருந்து ரூ.56 ஆகவும் கொழுப்பு சத்து செறிகூட்டப்பட்ட பால் ரூ.60-லிருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. தயிர் லிட்டர் ரூ.58-லிருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. தனியார் பால் விலை திடீரென  உயருவதால் அதனை அதிகமாக பயன்படுத்தும் ஓட்டல்கள், டீ கடைகளில் விலை உயர உள்ளது.  ஏற்கனவே சிறிய டீ கடைகளில் ஒரு டீ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் பால்  விலை உயர்வதால் பொது மக்கள்  பாதிக்கப்படும் சூழல் உரு வாகிறது. ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் விலை லிட்டருக்கு ரூ. 5  முதல் ரூ. 10 வரை வித்தியாசம்  உள்ளது. ஆவின் நிலைப்படுத்தப்  பட்ட பால் (பச்சை நிறம்) ஒரு  லிட்டர் ரூ. 47, சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) ரூ. 43, செறியூட்டப்பட்ட  பால் (ஆரஞ்ச்) ரூ. 51 விலை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப் பட்ட அதிகபட்ச விலையை விட  கூடுதலாக ரூ. 3 விலைக்கு எல்லா  கடைகளிலும் விற்கப்படுகிறது.

;