tamilnadu

img

வேலம்மாள் பள்ளி மாணவர் சாதனை

சென்னை,ஜன.29- தேசிய ஸ்கேட்டிங் போட்டியில், சென்னை  முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் முதலிடம்  பிடித்து தங்கப்பதக்கங்கள் குவித்து அசத்தினார். எஸ்எஸ்எப்ஐ என்னும் அமைப்பின் சார்பில்  நாக்பூரில் தேசிய ஸ்கேட்டிங் போட்டிகள் நடை பெற்றன. இதில் நாடு முழுவதிலிருந்தும் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற சென்னை வேலம்மாள் பள்ளி  7 ஆம் வகுப்பு மாணவன் ஜெயீஸ்வினய் 10 மற்றும்  12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 500 மீட்டர், 1000 மீட்டர் ரிங் ரேசில்  முதலிடம் பிடித்தார்.  இந்த இரு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்று பெருமை சேர்த்த மாணவனுக்கு பள்ளியின் சார்பில்  பாராட்டு தெரிவிக்கப்பட்டது

;