tamilnadu

img

சென்னையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

சென்னை, மே 7- சென்னையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ காய்  குறைந்தபட்சம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொரோனா தொற்று பரவ லையடுத்து கோயம்பேடு சந்தை  மூடப்பட்டுள்ளதால் சென் னைக்கு காய்கறி வரத்து நிறுத்  தப்பட்டுள்து. இதனால் காய்க றிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்  றின் விலையும் உயர்ந்துள்ளது ஆங்காங்கே உள்ள தற்காலிக காய்கறி கடைகளிலும், தள்ளு வண்டி கடைகளிலும பொதுமக் கள் காய்கறி வாங்குகின்றனர். இதுகுறித்து பொதுமக் கள் சிலர் கூறுகையில், “சென்னை யில் காய்கறி திடீரென விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மார்க்கெட்டுக்கு வர வேண்டாம், மார்க்கெட் விலையில் காய்கறிகளை வீடு  தேடி கொண்டு வந்து வியாபாரி கள் விற்பார்கள் என்று மாநக ராட்சி அறிவித்திருந்தது. அதன் படி தற்போது வண்டிகள் வருவ தில்லை. தக்காளி, வெங்காயம் கிலோ 40-50 ரூபாய்க்கும், பெரும்பாலான காய்கறிகள் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்கின்றனர். பழங்களின் விலை யும் இரட்டிப்பாக உயர்ந்துள் ளது” என்றனர். வியாபாரிகள் கூறுகை யில், “கோயம்பேடு சந்தை  மூடப்பட்டதால் கொத்தவால் சாவடி, மாதவரம் புறநகர் பேருந்து தற்காலிக சந்தைக்கு சென்று சரக்குகளை வாங்கி வருகிறோம். அங்கேயுள்ள வியா பாரிகள் என்ன விலை நிர்ண யித்து எங்களுக்கு தருகிறார் களோ அதற்கேற்ப நாங்கள் விலை நிர்ணயித்து விற்கி றோம்” என்கிறார்கள்.
திருமழிசை
கோயம்பேடு சந்தை தற்காலி கமாக திருமழிசை துணைக்  கோள் நகரத்தில் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகி றது. எந்தவித அடிப்படை வசதி யும் இல்லாத அந்த இடத்திற்கு செல்ல கோயம்பேடு வியாபாரி கள் மறுத்து வருகின்றனர். அதே நேரத்தில் திருமழிசை யில் ஒவ்வொரு கடையும் 200 சதுர அடி பரப்பில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு வரு கிறது. அப்பகுதிக்கு வியாழ னன்று (மே 7) காய்களை கொண்டு வந்து லாரிகளில் இருந்தபடியே வியாபாரம் செய்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

;