tamilnadu

img

தடுப்பூசி ஒதுக்கீடு விவகாரம்... ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்....

சென்னை:
மாநிலங்களுக்கான  தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்று இந்தியஒன்றிய அரசின்  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டிற்கான  தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப தேவையான அளவுக்குதடுப்பூசியை வழங்க வேண்டும். மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில்அரசு மருத்துவமனைகளுக்கு 75 விழுக்காடு என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 25 விழுக்காடு எனவும் உள்ளது.தனியார் மருத்துவமனை களுக்கு ஒருநாள் தேவையை விட அதிக தடுப்பூசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுவே அரசு மருத்துவமனைகளில் ஒரு நாள்தேவைகுறைவான தடுப்பூசிகளே இருக்கின்றன. எனவே, அரசு  மருத்துவமனைகளுக் கான உள்ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு 10 விழுக்காடு என்ற விகிதத்தில் தடுப்பூசி ஒதுக்கீட்டை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

;