tamilnadu

img

தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசு

சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டப்பேரவையில் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்  சிகள், பொதுத்துறை மாநில சட்ட மன்றம் ஆளுநர் மற்றும் அமைச்ச ரவை, நிதி மற்றும் மனிதவள மேலா ண்மைத் துறை மற்றும் மின்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது  நடைபெற்ற விவாதங்களுக்கு பதில ளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு  பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:

“நாக்பூர், கொச்சி, புனே ஆகிய  நகரங்களுக்கு 2-ஆம் கட்ட மெட்ரோ  திட்டங்களுக்கு நிதியும் அனுமதி யும் வழங்கியுள்ள ஒன்றிய பாஜக அரசு, சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ  ரயில் திட்டத்திற்கு நிதி வழங்காமல்  கால தாமதம் செய்து வருவதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 12 ஆயிரம்  கோடி அளவுக்கு நிதிச் சுமை ஏற் பட்டுள்ளது.

இந்த நிதியை ஒன்றிய அரசு வழங்கி இருந்தால் 25  ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கி  இருக்கலாம். 30 ஆயிரம் கிலோ மீட்  டர் தூரம் கிராமங்களில் சாலை களை அமைத்து இருக்கலாம். மூன்று லட்சம் வீடுகள், 50 ஆயிரம் வகுப்பறைகள் கட்டி இருக்கலாம்.  ஆனால் எந்த திட்டத்தையும் செய்ய  முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி  ஏற்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி கோரப்  பட்ட நிலையில், ரூ. 232 கோடி மட்  டுமே நிதி வழங்கிய ஒன்றிய பாஜக  அரசு தமிழகத்திற்கு அநீதி இழைத்து  வருகிறது” என்றும் அவர் கடுமை யாக சாடினார்.

“மாநில அரசு - ஒன்றிய அரசு  இணைந்து செயல்படுத்தும் திட்டத் திற்கான பங்களிப்பை ஒன்றிய அரசு  குறைத்து வருகிறது. பிரதம மந்திரி  நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒன்றரை லட்சம் பங்க ளிப்பாக வழங்கிய நிலையில், தமிழ்  நாடு அரசு 12 லட்சம் ரூபாயில் இருந்து 14 லட்சம் ரூபாய் பங்களிப்  பாக வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வருவாய் இழப்பை வரி விகிதப்படி வசூலித்து இழப்பீடு சரி செய்யப்படும் என்றார்கள். ஆனால்  2022 ஆம் ஆண்டு அதை ஒன்றிய அரசு நிறுத்தியதால் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற் பட்டுள்ளது” என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். 

பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “அதிக மின்  சுமை மற்றும் குறைந்த மின்னழுத் தத்தை சரிசெய்ய தமிழ்நாடு முழு வதும் ரூ. 200 கோடி செலவில் புதிய தாகவும் மற்றும் கூடுதலாகவும் மின் மாற்றிகள் நிறுவப்படும். பசுமை எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு தனியார் மூலம் 2000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும். 

மாற்றுத்திறன் முன்னாள் படை  வீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்த வர்களுக்கு இணைப்புச் சக்கரங்கள்  பொருத்தப்பட்ட பிரத்தியேக பெட்  ரோல் ஸ்கூட்டர் மற்றும் சிறப்பு நாற்  காலிகள் இலவசமாக வழங்கப் படும். 

தையல் பயிற்சி சான்று பெற் றுள்ள முன்னாள் படை வீரரின் மனைவி  மற்றும் கைம்பெண், திருமணம் ஆகாத மகள்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும். 

அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி! 

அரசு உயர் பதவிகளுக்கு தேர்வு  செய்யப்படும் அலுவலர்கள் பணி யில் சேரும் பொழுது கொடுக்கப்  படும் பயிற்சியைத் தவிர பணி யிடை பயிற்சிகள் வழங்கப்படுவ தில்லை. அரசின் சேவைகளை மக்க ளிடம் விரைவாக கொண்டு சேர்க்கும்  அலுவலர்கள் மாறிவரும் தேவை களுக்கு ஏற்ப தங்களது செயல் திற னையும் வளர்த்துக் கொள்ள வேண்டி  உள்ளது. ஆகவே, பல்வேறு துறை களில் பணிபுரியும் அரசு உயர் அலு வலர்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம்,  வழக்கு மேலாண்மை போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்பு அதிகாரிகள் தங்கள் பணி களை திறம்பட மேற்கொள்ள பயன்  பாட்டில் இருக்கும் பழைய வாக னங்களை கழித்து புதிதாக நான்கு சக்கர வாகனங்கள் இரு சக்கர வாக னங்கள் வழங்கப்படும். 

ஆறு மாத சான்று படிப்பு 

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்ஐடிஎஸ்), சென்னை  பொறியியல் கல்வி நிறுவனம் (எம்எஸ்சி), இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத் திட்டக்குழு பொது மேலா ண்மையில் ஆறு மாத சான்றிதழ் படிப்பு துவங்கப்படும்” என்பன  உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.