tamilnadu

img

அடகு கடையான ஒன்றிய பாஜக அரசு... சென்னை ஆர்ப்பாட்டத்தில் அ.சவுந்தரராசன் சாடல்....

சென்னை:
மக்களை பற்றி கவலைப்படாமல் அனைத்திலும் லாபம் ஈட்டுகிற ஒரு அடகு கடையைப் போல செயல்படுகிறது ஒன்றிய அரசு என அ.சவுந்தரராசன் சாடினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து சாலை போக்குவரத்து கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயில் பவன் அருகே செவ்வாயன்று (ஜூலை 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில்,“ மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு மக்களை மனதில் வைத்து எந்த முடிவையும் எடுப்பதில்லை. எதிலும் லாபம் ஈட்டுகிற அடகு கடையைப் போல அரசை நடத்தி வருகிறது” என்றார்.

மக்கள் செத்து மடிகிற பிரச்சனையாக இருந்தாலும் இலவசமாக தடுப்பூசி போட மாட்டோம் என்று அடம் பிடித்த மோடி அரசை எதிர்த்து குரல் எழுப்பிய பிறகும், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் பிறகும்தான் தடுபூசியை இலவசமாக கொடுப்பதாக அறிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.பாஜக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டில் உலக சந்தையில் என்ன விலைக்கு விற்பனையானதோ அதில் பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை. இதனால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவ
சியம் ஏற்படவில்லை. ஆனால், ஒன் றிய அரசுக்கு நேரடியாக செல்லும் கலால் வரியை உயர்த்தி வருவதால் கடந்த 7 ஆண்டுகளில் டீசலுக்கு 810 சதம் அதாவது 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில பொருளாளர் வி.குப்புசாமி தலைமை தாங்கினார். மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தன், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர். ஜெயராமன், சாலை போக்குவரத்து தென்சென்னை மாவட்டச் செயலாளர் பி.அன்பழகன், ஆட்டோ சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஹனிபா, ஆட்டோ சங்க வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜெயகோபால், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஆட்டோ சங்க மத்திய சென்னை செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;